தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க தேசியச் செயலாளர் இல.கணேசன் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய இல.கணேசனோ...
தமிழகத்தில் கூட்டணியோடு தான் தேர்தலை சந்திக்க இருப்பதாக தேசிய தலைவர் அமித்சா கூறியுள்ளார். அது யாருடன் என்பது பின்னர் அறிவிக்கப்படும். பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு கவலையளிக்கிறது. விரைவில் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் பொருத்தமில்லா காலத்தில் கேரளா நடந்துகொண்ட விதம் தவறு. பிதரமர் மோடியை கொல்ல சதி செய்தவர்கள் ஆதாரத்தோடு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழகத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாளை இதே நிலை உங்களுக்கு வரலாம் என்றார். அதுபோல் ஷோபியா கைது செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது என்றவரிடம் தமிழிசை பெருந்தன்மையாக நடந்துகொண்டிருக்கலாம் என அனைத்துக்கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவிக்கிறார்களே என கேட்டதற்கு.
தமிழிசை மன்னிக்கும் சுபாவம் கொண்டவர் தான். இதே நிலை வேறோரு தலைவருக்கு நேர்ந்திருந்தால் இப்படி தான் விமர்சனம் செய்வார்களா? ஷோபியாவிற்கு பின்னால் ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டம் பற்றி காவல்துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள் என்று கூறினார்.