Skip to main content

கடன் தவணை செலுத்தாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது!

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

5 employees of a financial institution arrested for misbehaving with a woman

 

கிருஷ்ணகிரியில் கடன் தவணை செலுத்தாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கிருஷ்ணகிரி பழைய சுப்புராயசெட்டி தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவருடைய மனைவி சுமதி(40). தீனதயாளன் இறந்துவிட்ட நிலையில், சுமதி காட்டிநாயக்கன்பள்ளியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில், அவர் தனியார் நிதி நிறுவனத்தில் 1.80 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்கு மாதந்தோறும் 8500 ரூபாய் வீதம் கடந்த ஐந்து மாதங்களாக தவணை செலுத்தி வந்துள்ளார். நடப்பு பிப்ரவரி மாதத்திற்கான தவணை தேதி கடந்த பிறகும் உரிய தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்ததாகத் தெரிகிறது.  

 

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மேலாளர் பூவரசன், கடன் வசூல் பிரிவு ஊழியர் கொத்தேப்பேட்டா ராஜ்குமார், பாஞ்சாலியூர் ஆறுமுகம், பழையபேட்டை ஜீவா(24), பிரவீன்குமார்(26) ஆகிய ஐந்து பேரும் சுமதியின் வீட்டுக்குச் சென்று கடன் தவணையை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர்.  

 

அப்போது, சுமதி தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும், பிறகு செலுத்தி விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள், அவரை ஆபாசமாகப் பேசியதோடு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி, இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் நிதி நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்