ஜீவசமாதி அடைவதாக முருகன்
4வது நாளாக இன்றும் உண்ணாவிரதம்!
4வது நாளாக இன்றும் உண்ணாவிரதம்!
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தித கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். தனக்கு விடுதலை கிடைக்காது என்பதால், சிறையில், ஜீவசமாதி அடைய, தனக்கு அனுமதி வழங்கும்படி, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அவரது கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்று 4வது நாளாக தொடர்கிறது. அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.