திருச்சி மாவட்டத்தில் டிசம்பர். 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி, 16ம் தேதியுடன் முடிவடைந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 24 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கு 149, 241 யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443, 404 கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 2,212, 3,408 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 9,582 என மொத்தம் 4,077 பதவிகளுக்கு 13,386 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையில் 228 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 13,158 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 486 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி அந்தநல்லூர் யூனியனில் ஊராட்சி வார்டு உறுப்பினர் 11, மணிகண்டத்தில் 2 பஞ்சாயத்து தலைவர், 16 ஊராட்சி வார்டு உறுப்பினர், திருவெறும்பூரில் 13 ஊராட்சி வார்டு உறுப்பினர், மணப்பாறை 17 ஊராட்சி வார்டு உறுப்பினர், மருங்காபுரி ஒரு பஞ்சாயத்து தலைவர், 68 ஊராட்சி வார்டு உறுப்பினர், வையம்பட்டி 18 ஊராட்சி வார்டு உறுப்பினர், லால்குடியில் ஒரு பஞ்சாயத்து தலைவர், 47 ஊராட்சி வார்டு உறுப்பினர், புள்ளம்பாடியில் 62 ஊராட்சி வார்டு உறுப்பினர், மண்ணச்சநல்லூரில் 36 ஊராட்சி வார்டு உறுப்பினர், முசிறியில் 61 ஊராட்சி வார்டு உறுப்பினர், தொட்டியத்தில் 27 ஊராட்சி வார்டு உறுப்பினர், தா.பேட்டையில் 26 ஊராட்சி வார்டு உறுப்பினர், துறையூரில் 64 ஊராட்சி வார்டு உறுப்பினர், உப்பிலியபுரத்தில் 20 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 486 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.