நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து, சில நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் பயன்படுத்தி வருவதாகவும், இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சென்னையைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவர் 2018-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்திருந்தார்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலைகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, 'குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளைக் கண்காணித்து, விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்பொழுது பொதுப் பணித்துறை அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது,
அதில், தமிழகம் முழுவதும் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 468 ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது எனவும், 1080 ஆழ்துளைக் கிணறுகள் அனுமதியுடன் செயல்பட்டு வருவதாகவும் பொதுப் பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.