Skip to main content

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை பணம் கொள்ளை!

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில்
நகை பணம் கொள்ளை!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்து கடையாத்துபட்டி குன்னகுரும்பி கிராமத்தில் 200-க்கு மேற்பட்ட குடியிருப்பு உள்ளது இன்று காலை கருப்பையா, சிதம்பரம், மெய்யநாதன், சகாதேவன் உட்பட நான்கு பேர் குடும்பதோடு அருகில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று மாலை 4 மணிக்கு வீடு திரும்பிய போது சகாதேவன் வீட்டின் பூட்டு உடைந்து கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அவருடன் வந்த 3 பேரும் அவர்களது வீட்டிற்கு சென்று பார்க்கும் போது அவர்களின் வீட்டு பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுற்குள் சென்று பார்க்கும் போது வீட்டின் உள்ள பீரோக்கள் உடைத்து அதில் உள்ள நகை பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது பின்னர் அறந்தாங்கி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து நான்கு பேர் வீடுகளில் சோதனை செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 பேர் வீடுகளில் இருந்து சுமார் 70 சரவன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் அறந்தாங்கி காவல் துறை வழக்குபதிவு செய்து தொடர் கைவரிசையில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடிவருகின்றனர். அறந்தாங்கி அருகே தொடர்ந்து 4 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி எற்படுத்தி உள்ளது.

அதே போல நேற்று பாண்டிபத்திரம் கிராமத்தில் ஒரு வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம், இன்று அறந்தாங்கியில் அப்துல் ஹமீது தெரு நாகூர் கனி வீட்டில் சுமார் 25 பவுன் தங்களை நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம்,  3 மற்றும் களப்பக்காடு பகுதியில் 2 இடங்களில் சுமார் 14 பவுன் தங்க நகைகளும், கொள்ளை போய் உள்ளது. ஒரே நாளில் 7 சம்பவங்கள் நடந்ததால் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்