உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதி உதவி!
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 16 கண் மதகு வழியாக உபரிநீர் செல்லும் ஆற்றின் குட்டையில் மூழ்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் மணிகண்டன், மோகன், ராஜா, தமிழரசன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போது மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.