Skip to main content

சிலை திருட்டு வழக்கில் மயிலாடுதுறை இணை ஆனையர் உட்பட 4 பேர் கைது

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
சிலை திருட்டு வழக்கில் மயிலாடுதுறை இணை ஆனையர் உட்பட 4 பேர் கைது



தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 6 சிலைகள் மாயமானது தொடர்பாக இனை ஆனையர் கஜேந்திரன் உட்பட இதுவரை 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பசுபதீஸ்வரர்கோயில் உள்ளது. ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரன் சோழன் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலை சுற்றிலும் அகழியுடன் கூடிய கோட்டையும் இருந்தது. பந்தநல்லூரைச் சுற்றியுள்ள 73 கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்த பழமையான, ஐம்பொன் சிலைகள், வெண்கலச் சிலைகள் ஆகியவற்றை பாதுகாப்பிற்காக பசுபதீஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து வைத்துள்ளனர். 

சம்பந்தப்பட்ட கோயில்களில் திருவிழா நடைபெறும்போது அந்தந்த கிராம சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டுவருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2013-ல் இக்கோயிலில் இந்துசமய அறநிலையத் துறையினர் கணக்கு எடுத்தபோது இங்கு பாதுகாப்பாக இருந்த  59 சிலைகளில் கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வானை, சந்திரசேகரஅம்மன் சிலை, ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் மாயமானது மீதமுள்ள 53  சிலைகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் என பத்து பேர் மீது பந்தநல்லூர் போலீஸாரும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி டி. குமார் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட கோயிலில் ஏற்கெனவே செயல் அலுவலராக இருந்த அ. ராமச்சந்திரன் (63), பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோயில் தலைமை எழுத்தர் பந்தநல்லூரைச் சேர்ந்த கி. ராஜா (37) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதன் தொடர்ச்சியாக சிலை பாதுகாப்பு பிரிவு ஐஜீ பொன், மாணிக்கவேல் விசாரையை மேலும் தீவிர படுத்தி, பசுபதீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை தாலுக்காவில் உள்ள கொற்கை, கடலங்குடி கோயில்களிலும் ஆய்வு செய்தார் அந்த கோயில்களிலும் சிலை திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது. சிலை திருட்டுக்கு காரணம் முறையான பாதுகாப்பு இல்லாததே காரனம் என பொன்,மாணிக்கவேல் கூறினார். 

இந்த சூழலில் அனைத்து கோயில்களிலும் தவறு நடந்துள்ளது, சிலை திருட்டு நடந்துள்ளது என்பதோடு, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் சிலைவிவகாரத்தை மறைத்துவிட்டார் என இந்து சமய அறநிலையதுறை இனை ஆனையர் கஜேந்திரன், பசுபதீஸ்வரர் கோயில் செயல்அலுவலர் காமராஜ் ஆகிய இரண்டு பேரையும் இன்று அதிகாலை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

30ம் தேதி மதியம் பசுபதீஸ்வரர் கோயிலி்ல் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள சிலைகளை அந்தந்த கிராம பூசாரி, அர்ச்சகர்களை கொண்டு அடையாள அணிவகுப்பு செய்திருகிறார் ஐ,ஜி பொன்,மானிக்கவேல். இனை ஆணையர் கைது விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், கும்பகோணம் அறநிலையதுறை அலுவலக வாசலில் இந்துமக்கள் கட்சியினர் இனிப்பு வழங்கி கஜேந்திரனை கைது செய்த சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர்.

க.செல்வகுமார்.

சார்ந்த செய்திகள்