Skip to main content

பொன்மலை ரயில்வே பணி மனையில் 3.5 டன் எடையுள்ள மோட்டார் திருட்டு!

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

3.5 ton motor theft at Ponmalai railway work site

 

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜீன்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் தற்போது 5 ஆயிரத்திற்கு அதிகமான வெளிமாநில மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த பணிமனையில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரிக்கல், இஞ்சின் வடிவமைப்பு, ரயில் கட்டுமான பிரிவு  என்று பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் இல்லாமல் மற்ற பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களும் இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பணிமனைக்குள் இருந்து ஸ்க்ராப் என்று சொல்லக்கூடிய பழைய இரும்பு பொருட்கள் அனைத்தும் ஏலத்தில் எடுத்துச் செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் லாரி வந்துள்ளது. அந்த லாரியில் பணிமனையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்த பணியாளர்களைக் கொண்டு பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது, இஞ்சினில் உள்ள மின் மோட்டாரையும் சேர்த்து ஒப்பந்த ஊழியர்கள் ஏற்றியுள்ளனர்.

 

அதன்பின் ஊழியர்கள் மின் மோட்டாரை காணவில்லை என்று கூறி தேட ஆரம்பித்தபோது, பணிமனைக்குள் வந்துவிட்டுச் சென்ற லாரிகள் எது என்று அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டபோது, சிசிடிவி பதிவுகளைக் கொண்டு அந்த லாரியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின் அந்த லாரி எது என்று கண்டுபிடித்து அந்த லாரியை ஓட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் அந்த லாரி கோவையைச் சேர்ந்தது என்றும், அதனை ஓட்டி வந்தவர்கள் கோபால்(30), மணிகண்டன்(29) ஆகிய இருவரும் என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை கைப்பற்றி சோதனை செய்ததில் அவர்கள் 3.5 டன் எடையுள்ள 2 மோட்டார்களைத் திருடிச் சென்றுள்ளனர். ஒரு மோட்டாரின் விலை 25 லட்சம் ரூபாய் எனவும், 2 மோட்டார்கள் 50 லட்சம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அவர்களைக் கைது செய்த ரயில்வே காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் மின் மோட்டாரை திருடிச் செல்லும் அளவிற்கு அஜாக்கிரதையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரண், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலீஸ்காரர் சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரையும் இரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்