Skip to main content

ஆலங்குடி அருகே 3 டன் ரேஷன் அரிசி கடத்தல்- வாகனங்கள் பறிமுதல்!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

3 tons of ration rice near Alangudi- vehicles seized!

 


புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ள நிலையில் கடத்தல்காரர்கள் கடத்தி வரப்படும் ரேஷன் அரிசிகளை ஆலங்குடி, புதுக்கோட்டை, அரிமளம், புதுவயல் ஆகிய ஊர்களில் உள்ள மில்களில் விற்பனை செய்கின்றனர்.

 

மில்லில் குறைந்த விலைக்கு வாங்கும் அரிசி அங்கு பாலிஷ் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆலங்குடி அருகே வேங்கடகுளம் பகுதியிலிருந்து 2 வாகனங்களில் ஆலங்குடி பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக 'ஹலோ போலீஸ்' என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலையடுத்து மாவட்ட எஸ்.பி யின் சிறப்புப்படை போலீசார் சென்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது தட்சிணாபுரம் பகுதியிலிருந்து வந்த ஒரு வாகனத்தில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

 

2 டன் ரேசன் அரிசி மூட்டைகள், கடத்தல் வாகனம், செல்போன், ரூ.2,670 பணம் மற்றும் தராசு ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார், அடுத்த அரை மணி நேரத்தில் மற்றொரு வாகனத்தை நிறுத்திய போது சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட நிலையில் அதிலிருந்து ரூ.4,700 பணம் மற்றும் தராசு, செல்போன்களை பறிமுதல் செய்தனர்.  கடத்தல் வாகனத்தில் வந்த தட்சிணாபுரம் தமிழரசன் மகன் வெங்கடாசலம் (35), கறம்பக்குடி தாலுகா மணக்கொல்லை ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (23), ஆலங்குடி சுண்ணாம்புக்காரத் தெரு முத்துசிதம்பரம் மகன் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்து குடிமைப்பொருள் வழங்கும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்