திருத்தணியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாழிகள் கண்டுபிடிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுப்பிரமணியசாமி அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இதன் அருகே பழங்கால அரியவகைப் பொருட்கள் புதைந்து இருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதுமக்கள் பயன்படுத்திய தாழி மற்றும் தொட்டில் தாழி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.