சென்னையில் 3 ஆயிரம் இடங்களில்
கண்காணிப்பு கேமராக்கள்!
சென்னை கிழக்கு இணை ஆணையர் மனோகரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’’கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் சுமார் 3 ஆயிரம் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.