Published on 03/11/2018 | Edited on 03/11/2018

2.0 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்கியது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினகாந்த் நடிப்பில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவகியுள்ள திரைப்படம் 2.0. இதற்கு முன் வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2.0 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ள நிலையில் 2.0 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் சங்கர், நடிகர் ரஜினகாந்த், அக்ஷய்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் பங்குபெற்றுள்ளனர்.
2.0 படத்தின் 3டி ட்ரைலர் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.