நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் அமுதவல்லி உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ரேகா என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை இங்கு வாங்கி பெங்களூர் போன்ற வெளிநகரங்களிலும் விற்கப்பட்டதாக விசாரணையில் தெரியவர அந்த தகவலின் அடிப்படையில் ரேகாவை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் விற்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் கொல்லிமலை பழங்குடியின மக்களின் குழந்தைகள் என்றும். அவர்களின் ஏழ்மையை குறிவைத்து குழந்தைகள் வாங்கப்பட்டததும் தெரியவர கொல்லிமலையிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் இந்த வழக்கில் இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது. அதாவது ராசிபுரம் குழந்தை விற்பனை குறித்த விவகாரம் வெளியான பிறகு நாமக்கல் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கில் அமுதா கடந்த நான்கு ஆண்டுகளாக குழந்தை விற்பனையை செய்தோம் என கூறியுள்ளதால் குறிப்பிட்ட அந்த நான்கு ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் விவரங்களை பார்க்கும் போது கடந்த நான்கு ஆண்டுகளில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் மட்டும் 4300 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 260 குழந்தைகளின் தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை என சுகாதாரத்துறை அறிக்கை கொடுதுள்ளது.
சுகாதாரத்துறை கொடுதுள்ள விவரங்களின் அடிப்படையில் அந்த 260 குழந்தைகளும் விற்கப்பட்டதா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணையை துவக்கியுள்ளனர்.