சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
தற்போது தமிழகத்தில் நிலவும் சூழல் அதுவும் காவிரி பிரச்சனைக்காக அரசியல் எனும் கோட்டைத்தாண்டி அனைவரும் தமிழகர்கள் என்ற ஒரு குடைக்குள் சேரவேண்டிய நேரம் இது.
காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட அடுத்தகட்ட நடவடிகைகள் என்ன என்பது பற்றி விவசாய அமைப்புகள் மற்றும் பல வல்லுனர்களிடம் பேசி முடிவெடுக்கப்பட்டு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். நாம் அனைவரும் கலந்து ஆலோசிக்க ''காவேரி உரிமையில் தமிழகத்தின் குரல்'' என்ற தலைப்பில் ஆலோசனைக்கூட்டம் வரும் மே 19 ஆம் தேதி காலை பத்து மணிக்கு மெட்ரோ மேனர் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், காவிரிக்கு குரல் கொடுக்கும் அனைத்து விவசாய அமைப்புகளும், மாணவர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
இந்த ஆலோசனை கூட்டமானது நல்லகண்ணு அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது. இது அரசியலை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்படும் கூட்டமல்ல. காவிரியில் 400 டிஎம்சி தண்ணீர் கேட்டோம் பிறகு அதில் பாதியாவது கொடுங்கள் எனக் கேட்டோம் தற்போது நீரின் அளவையெல்லாம் விட்டுட்டு காவேரி மேலாண்மை வரியமாவது அமையுங்கள் எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இப்படி காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு நிலவும் பாதகங்கள், தீர்வுகள் குறித்த உரையாடலில் உண்மையாக, உணர்வுபூர்வமாக காவிரி பிரச்சனையில் தீர்வு வேண்டும் என தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும், விமர்சனங்கள் பல நமக்குள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து நிற்கவேண்டிய தருணம் இது. இது ஒருவரை ஒருவர் முந்தும் விளையாட்டாக இருந்துவிடாமல் பிரச்சனைக்கான தீர்வுதரும் ஒரு உரையாடலின் ஆரம்பமாக இது இருக்கும் எனவும் கேட்டுக்கொண்டார்.