முதல்வர் வருகைக்காக பேனர் வைத்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் பலி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாப்பேட்டையில் தமிழக முதமைச்சர் வருகைக்காக பேனர்களை திருப்பி வைக்க முயன்ற இரண்டு பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ஒருவர் படுகாயங்களோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் வந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை வரவேற்க வழி நெடுகிலும் பேனர்கள் வைத்திருந்தனர் அதிமுக தொண்டர்கள், அந்த வகையில் அம்மாப்பேட்டையிலும் பெரிய பெரியபேனர்கள் வைத்திருந்தனர். முதலமைச்சர் திருவாரூர் நிகழ்ச்சி முடிந்து திரும்பி வரும்போது அவர் பார்க்க வேண்டும் என்று பேணர்களை அ.திமு.க தொண்டர்களான தருமன் என்கிற கருணாநிதி மணியரசன் மற்றும் சத்தியாராஜ் ஆகிய மூவரும் திருப்பி வைக்க முயன்றனர். அப்போது அருகில் இருந்த மின் கம்பியில் பட்டு மூன்று பேரையும் தாக்கியது அதில் தருமன் என்கிற கருணாநிதியும், மணியரசனும் சம்பவ இடத்திலேயே இறந்தனர் .சத்தியராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை கேள்விபட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் அம்மாப்பேட்டை பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
க, செல்வகுமார்