Skip to main content

நெல்லையில் கருணாஸ் கார் உட்பட 2 கார்கள் உடைப்பு!

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
நெல்லையில் கருணாஸ் கார் உட்பட 2 கார்கள் உடைப்பு!



நெல்லை மாவட்டத்தின், நெற்கட்டும் செவல் பாளையத்தின் மாமன்னர் பூலித்தேவரின் 302வது பிறந்த நாள் விழா இந்த வருடம் முதல் அரசு விழாவாக நடத்தப்பட்டது. இன்று நடந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பி.எஸ். மற்றும் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் நெற்கட்டும் செவலில் உள்ள மன்னர் பூலித்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்றைய தினம் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் மன்னரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். 

மதியம் சுமார் மூன்று மணியளவில் நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது புலிப்படை அமைப்பின் பொறுப்பாளர்களோடு தனது காரில் நெற்கட்டும் செவல் கிராமத்திற்கு மாமன்னர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்தார். கிராமத்திற்கு வந்த அவரது கார், முன்னே சென்ற ஒரு காரை ஸ்பீடாக ஒவர்டேக் செய்திருக்கிறது. இதனால் கருணாஸ் ஆதரவாளர்களுக்கும், முன்னால் சென்ற காரிலிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் கருணாஸ் ஆதரவாளர்களால் முன்னால் சென்ற காரின் கண்ணாடிகள் நொறுக்கப்பட, அதன் பின் கருணாசின் கார் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து மாலை மரியாதை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கருணாஸ் கிளம்பிச் சென்றார்.

இதில் உடைக்கப்பட்ட கார்களைப் படம் பிடித்த தனியார் தொலைக்காட்சியின் கேமரா மேன் கணேசின்குமாரின் கேமராவின் மெமரிக் கார்டு மற்றும் பேட்டரி போன்றவைகள் பறிக்கப்பட்டுள்ளன. பதற்றமான சூழலில் கார்கள் உடைப்பு தொடர்பாக நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்