கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இக்குடமுழுக்கையொட்டி, உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்களின் கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் தங்கள் கைவரிசைகளை காட்டியுள்ளனர்.
தீவலூர் கிராமத்தை சேர்ந்த பிரேமா, கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி, பெண்ணாடம் பகுதிக்குட்பட்ட மங்கையர்க்கரசி, பெரியார் நகரை சேர்ந்த துர்காதேவி, நெய்வேலி பகுதியை சேர்ந்த மஞ்சுளா உள்ளிட்ட ஆறு பெண்களிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து நகையை பறிகொடுத்தவர்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 19 பவுன் நகைகள் திருடு போயிருப்பதாக தெரிகிறது.