Skip to main content

பழைய பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியினை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published on 10/08/2017 | Edited on 10/08/2017

பழைய பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதிக்கப்பட்ட 
18 சதவீத ஜிஎஸ்டி வரியினை செய்ய வலியுறுத்தி
கோவையில் ஆர்ப்பாட்டம்

பழைய பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியினை இரத்து செய்ய  வலியுறுத்தி, நெகிழி மறுசுழற்சி மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்கூடங்களில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிமுறையில் புதிய பொருட்களாக தயாரித்து வருகின்றன. இந்நிலையில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மத்திய அரசு அண்மையில் 18 சதவீத ஜிஎஸ்டி வரியினை விதித்தது. இந்த ஜிஎஸ்டி வரியினை இரத்து செய்யக்கோரி, கோவை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற்கூடங்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் கோவை மாவட்ட பழைய பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கம், மறுசுழற்சியாளர் சங்கம், பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் விற்பனையாளர் சங்க கூட்டமைப்பு ஆகிய அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் தொழில் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும், பிளாஸ்டிக் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பிளாஸ்டி பிளாஸ்டிக் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், ஜி. எஸ் டி வரியை திரும்ப பெற்க்கோரி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஜி எஸ் டி வரியை 18% சதவிகிதமாக மத்திய அரசு அறிவித்ததை கண்டித்து இன்று ஒரு நாள் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் தொழிற் கூடங்கள் கோவையில் மூடப்பட்டன. சுமார் 200 டன் பிளாஸ்டிக் மறுசுழற்சி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பிளாஸ்டிக் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போராட்டம் காரணமாக சுமார் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜிஎஸ்டி வரி விதிப்பினை 18% சதவிகிதலிருந்து 5% மாக குறைக்க வேண்டும் எனவும் பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

- அருள்

சார்ந்த செய்திகள்