வரி ஏய்ப்பு புகாரில், மதுரையைச் சேர்ந்த அன்னை பாரத், கிளாட்வே, கிளாட்வே கிரீன் சிட்டி ஆகிய அரசு ஒப்பந்ததாரர்களின் கட்டுமான நிறுவனங்களில், கடந்த ஜூலை 20- ஆம் தேதி அன்று முதல் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வந்தனர்.
வீடுகள், அலுவலகங்கள் என கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான மதுரை மாவட்டத்தில் உள்ள 20- க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்து வந்த நிலையில், இன்று (23/07/2022) மாலை நிறைவுப் பெற்றது.
சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 165 கோடி பணம், 14 கிலோ தங்கம், ரூபாய் 235 கோடி மதிப்பிலான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையின் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.