Published on 20/07/2022 | Edited on 20/07/2022
நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 162 வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றனர். மொத்தம் உள்ள 200 கேள்விகளில் மாணவர்கள் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அந்த வகையில், தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 162 கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், 38 கேள்விகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைத்த பாடநூல்களில் இருந்து கேட்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.