சாராய ஊறல் ஊறல் நீரை குடித்த 15 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு பக்கமிருக்க டாஸ்மாக் மூடப்பட்டதால் வேறு விதமான பொருட்களை பயன்படுத்தி போதை ஏற்றிக் கொள்ள முயற்சி செய்து, அதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றச்சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மேலேறிகொட்டாய் மலையில் சாராய ஊறல் நீரை குடித்த பெருமாள் என்பவரின் 15 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சாராயம் காய்ச்சிய பின் விட்டுச்சென்ற ஊறல் நீரை ஆடுகள் குடித்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.