கடந்த வாரம் திருச்சி லலிதா ஜூவல்லரியில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வரை நகைகள் இரவில் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையை கச்சிதமாக நடத்தியது தென்னிந்தியாவின் பிரபல கொள்ளையன் முருகன் குழு என்பதை திருவாரூரில் வாகன சோதனையில் சிக்கிய மணிகண்டன் தெரிவித்தான்.
வாகன சோதனையின் போது மணிகண்டனோடு சிக்க வேண்டிய சுரேஷ் என்பவன் தப்பினான். 29 வயதான சுரேஷ், பிரபல கொள்ளையன் முருகனின் அக்கா கனகவள்ளியின் மகன் என்பது குறிப்பிடதக்கது. இந்த சுரேஷ்சுக்கும் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சுரேஷை பிடிக்கும் வேலையில் திருச்சி போலீ ஸார் ஈடுப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 10ந் தேதி காலை 10 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பிரபுவிடம் சரணடைந்தான். சுரேஷை நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்டிருந்த சக விசாரணை கைதிகளுடன் உட்கார வைத்தார். பேன்ட்- சட்டையில் அப்பாவி போல் அமர்ந்திருந்த சுரேஷ்சிடம் மதியம் 12 மணியளவில் விசாரணை நடத்திய நீதிபதி, அவர் சொன்னதை பதிவு செய்துகொண்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு சுரேஷை செங்கம் டி.எஸ்.பி சின்ராஜியிடம் நீதிபதி ஒப்படைத்தார்.
நீதிமன்றத்துக்குள் இருந்த சுரஷை செய்தியாளர்கள் புகைப்படம், வீடியோ எடுத்ததால் நீதிபதி செய்தியாளர்களை கண்டித்தார் எனக்கூறப்படுகிறது.