Published on 26/05/2019 | Edited on 26/05/2019
தமிழகத்தில் நடந்து முடிந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 13 எம்எல்ஏக்கள் வரும் 28 தேதி பதவியேற்க இருக்கின்றனர்.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்ற 13 எம்.எல்.ஏக்கள் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் வரும் 28 ஆம் தேதி சபாநாயகர் அறையில் பதவியேற்க இருக்கின்றனர்.
அதிமுக சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை ஆனாலும் அவர்களும் சபாநாயகரிடம் நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் இரு தரப்பு எம்.எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.