Skip to main content

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு; தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

12th Class Exam Result; The date was announced by the School Education Department

 

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம்  தேதி வரை 12ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதியுள்ள நிலையில் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் மே மாதம் 5 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என முன்னதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

 

ஆனால் வரும் மே 7ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற இருப்பதால் அது நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. இதனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதியை மாற்றி பின்னர் அறிவிப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரும் மே 8 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn..nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஒரு மாதத்திற்குள் எஸ்.ஐ. தேர்வு முடிவுகள்!

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Within a month S.I. Exam results

 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறைக்கான  ஒருங்கிணைந்த தேர்வு 2023 க்கான அறிவிக்கை கடந்த மே மாதம் 5 ஆம் தேதி மற்றும் மே 23 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் வெளியிடப்பட்டது.

 

இதில் சார்பு ஆய்வாளர் தாலுகா, ஆயுதப்படை, சிறப்புக் காவல்படை ஆகிய பணிகளுக்கு 621 மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு 129 உட்பட மொத்தம் 750 (ஆண்கள் - 559, பெண்கள் - 191) காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 722 பேர் (ஆண்கள்- 1 லட்சத்து 45 ஆயிரத்து 804 பேரும்,  பெண்கள் - 40 ஆயிரத்து 885 மற்றும் திருநங்கைகள் - 33பேரும்) விண்ணப்பித்திருந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு 33 மாவட்ட மாநகர மையங்களில் நடைபெற்றது. அதே போன்று கடந்த 27 ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை விண்ணப்பதாரர்களுக்கான துறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது. சுமார் 80 சதவீத விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு முடிவுகள் சுமார் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.