Skip to main content

மீண்டும் கசிந்தது வினாத்தாள்; ஆனாலும் திருப்புதல் தேர்வில் மாற்றம் இல்லை என அறிவிப்பு

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

nm,

 

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற கணித தேர்வு வினாத்தாள் நேற்று இரவு வாட்ஸ்அப் வாயிலாக கசிந்தது. அதேபோல, 10-ஆம் வகுப்பு அறிவியல் வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்தது. இந்த வினாத்தாள்கள் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் இருந்து வெளியே கசிந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில், வருகிற 17ம் தேதி நடைபெற உள்ள 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளும் தற்போது கசிந்துள்ளது. அதைப்போல 12ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாளும் வெளியாகியுள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

 

அதன்படி நாளை முதல் வினாத்தாள்கள் முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்படாது என்றும், திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். பொதுத்தேர்வு என்றால் மாற்று வினாத்தாள் இருக்கும். ஆனால், திருப்புதல் தேர்வுக்கு அந்த நடைமுறை பின்பற்ற வாய்ப்பில்லாத காரணத்தால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்