ராமேஸ்வரம் மீனவர் 12 பேர் சிறைபிடிப்பு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், 12 பேரை இலங்கை கடற்படையினர், இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் தங்கச்சிமடம் மற்றும் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்த துரைசிங்கம் என்பவருக்கு சொந்தமான 2 படகுகளையும் சிறைபிடித்து சென்றனர்.
மீனவர்களின் கைது சம்பவத்தை கேட்ட உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தடை செய்யபட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதால் தான் இலங்கை கடற்படையினர் கைது செய்வதாகவும், இரட்டை மடி வலைகளை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.