திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் கொத்தயம் நல்லதங்காள் அணைக்கட்டு, பணி விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு 13 கோடியே 17லட்சம் செலவில் நல்லதங்காள் அணைக்கட்டு விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
அதன்பிறகு பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். அதை தொடர்ந்து தலைவரின் இந்த 14 மாத ஆட்சியில் மட்டும் 12 லட்சத்து 17ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.
இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளா் ராஜாமணி,தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரி ஹரசுதன், ஒன்றிய பெருந்தலைவர் சத்தியபுவனா, ஒன்றிய துணை பெருந்தலைவர் தங்கம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ள பலர் கலந்து கொண்டனர்