Published on 08/08/2019 | Edited on 08/08/2019
நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பல்வேறு முறைகளில் நிதி வசூலித்து வரும் நிலையில் மதிமுக புதிய வழி ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அதன்படி மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் கட்சிக்கு 100 ரூபாய் நிதியாக அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் என்பது குறைந்தபட்ச நிதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வைகோவிற்கு சால்வை அணிவிக்க விரும்பும் கட்சியினர் சால்வைக்கு பதிலாகவும் நிதி வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.