Published on 13/08/2022 | Edited on 13/08/2022
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 100 கிலோ அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜீயபுரம் டி.எஸ்.பி பரவாசுதேவன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ராம்ஜி நகர் அருகே சின்ன கொத்தமங்கலம் கோனார் குளத்தில் விற்பனைக்காக புதைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 100 கிலோ கஞ்சா கழிவினை கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.