10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள வேலைநிறுத்த அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, வங்கிகளை ஒன்று சேர்க்கக்கூடாது, வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பது கிரிமினல் குற்றம் என்று அறிவிக்க வேண்டும், ஜி.எஸ்.டி. என்ற பெயரில் சேவைக் கட்டணத்தை அதிகரிக்கக்கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது நடைபெற உள்ளது.
முதலில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று வேலைநிறுத்தமும்,செப்டம்பர் 15-ஆம் தேதி 1 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கும் ஊர்வலமும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடர்ந்து 2 தினங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
- சி.ஜீவா பாரதி