Skip to main content

சேலம் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் ஆசாமிகள் தப்பி ஓட்டம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

10 kg ganja seized in Salem train; The kidnappers fled

 

சேலம் வழியாகச் சென்ற பயணிகள் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

பிற மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதைத் தடுக்க ரயில்வே காவல் துறையினர் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். எனினும், ரயில்களில் கஞ்சா கடத்துவது தொடர்ந்து வருகிறது.

 

இந்நிலையில், சேலம் ரயில்வே காவல்துறை எஸ்.ஐ. பாலமுருகன் தலைமையில் தனிப்படையினர் டிச. 7ம் தேதி காலை தன்பாத் - ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறி சேலம் வரை ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். பின்பகுதியில் உள்ள ஒரு முன்பதிவில்லா ரயில் பெட்டியில் சோதனை நடத்தியபோது, பயணிகள் பார்சல்களை வைக்கும் இடத்தில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது தெரியவந்தது.

 

அந்தப் பையைச் சோதனையிட்டதில் அதற்குள் 10 கிலோ கஞ்சா 5 பொட்டலங்களில் இருப்பது தெரியவந்தது. கஞ்சாவைக் கடத்தி வந்த மர்ம நபர்கள், காவல்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து தப்பிச் சென்று விட்டது தெரியவந்தது. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கஞ்சாவை தனிப்படையினர் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆய்வாளர் சிவ செந்தில்குமார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்