Skip to main content

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ. 3.5 கோடி அபராதம்!

Published on 18/09/2024 | Edited on 18/09/2024
10 fishermen of Tamil Nadu Rs. 3.5 crore fine

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடந்த மாதம் 5ஆம் தேதி (05.08.2024) ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மன்னார் மேற்கு குதிரைமலை என்ற கடல்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து 22 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அதோடு மீனவர்கள் மீது அதிக குதிரைத் திறன் (HP) கொண்ட இயந்திரத்தைப் பயன்படுத்தி மீன் வளத்தை அளித்ததாகவும் கூடுதலாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழலில் தான் நீதிமன்ற காவல் முடிந்து கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரும் கடந்த 3ஆம் தேதி (03.09.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி இலங்கை ரூபாயில் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 42 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த அபராதத்தைக் கட்ட தவறும் பட்சத்தில் 6 மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் 10 மீனவர்களுக்கு வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேருக்கு ரூ. 3.50 கோடி அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ. 3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து  இலங்கை நீதிமன்றம் முன் தமிழக மீனவர்கள் 7 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சார்ந்த செய்திகள்