எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இயக்கம் பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,
நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் நாங்கள் அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்கிறோம். மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபடுவர். நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர்தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதா என்னுடைய சொந்த குடும்பம். சொந்த குடுமபமாக இருந்துகொண்டு அதிமுகவை அழிவுபாதையில் கொண்டு செல்ல விரும்பவில்லை. இதனால்தான் இந்த மனமாற்றம். அதிமுகவுடன் மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்கள் இயக்கம் அதிமுகவுடன் இணைவது உறுதி. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கடிதம் கொடுக்க இருக்கிறோம். தேர்தலுக்கு பிறகு இணையவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும்.
எங்கள் பேரவை தேர்லில் போட்டியிட்டால் அதிமுக தொண்டர்களின் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். எனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார்.