தமிழக அரசியலில் தேர்தல் முடிவுக்கு பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அதிமுக கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.தமிழகத்தில் தினகரனின் அமமுக கட்சி இந்த தேர்தலில் ஒரு மாற்று சக்தியாக இருக்கும் என்ற நிலையில் தேர்தல் முடிவுகளால் பெரும் அதிருப்தியை அடைந்துள்ளது.போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட்டை இழந்தது.மேலும் இடைத்தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட தினகரன் கட்சி வெற்றி பெறவில்லை.

இதனால் தினகரன் கட்சி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்க தமிழ்செல்வனின் ஆதரவாளரான அருண் குமார் தனது ஆதரவாளர்களுடன்அதிமுகவில் இணைந்துள்ளார்.இதனால் தங்க தமிழ்ச்செல்வனும்,தினகரனும் கடும் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.இந்த தேர்தலில் தேனி தொகுதியில் மும்முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் படுதோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த தேர்தல் முடிவால் தங்க தமிழ்செல்வனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.தேர்தல் முடிவுக்கு பிறகு தினகரன் மட்டுமே சசிகலாவை சந்தித்தார்.தங்க தமிழ்ச்செல்வன் சசிகலாவை சந்திக்க தினகரன் கூட செல்லவில்லை என்பது குறிப்படத்தக்கது.இதனால் தேர்தல் முடிவுகள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இதன் விளைவாக அவர் வெகு விரைவில் கட்சி மாறுவார் என்று நெருங்கிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.