
திமுக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் எனும் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம்ம ஸ்கூல் எனும் திட்டம் சி.எஸ்.ஆர் எனும் பெயரில் அதிமுக ஆட்சியில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகப்படுத்திய திட்டம். அதனை பெயர் மாற்றம் செய்து முதல்வர் மீண்டும் அதை துவக்கி வைத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உதவி செய்யும் இந்த திட்டத்தை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி துவக்கி வைத்தேன். இதற்கு இணையத்தில் திரட்டப்படும் நிதி அதற்கென உள்ள தனி வங்கிக்கணக்கில் பெறப்படும். பொதுமக்கள் நிதி விபரங்களை நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
தற்போது இந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்து மீண்டும் இத்திட்டத்தை திமுக அரசு துவக்கியுள்ளது. இதற்கான தொடக்க விழாவிற்கு நட்சத்திர ஓட்டலில் சுமார் 3 கோடி ரூபாய் செலவு செய்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.