Skip to main content

தமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு! குழப்பத்தில் தொண்டர்கள்!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019


தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சரும், அதிமுகவின் மேற்கு மா.செவுமான கே.சி.வீரமணி வீடு ஜோலார் பேட்டையில் உள்ளது. இன்று காலை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தலைமையில் சென்னை, வேலூர், காட்பாடி, ஜோலார்பேட்டை என 120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

kc


இதில் ரியல் எஸ்டேட் அதிபர்களான ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரின் வீடு, அலுவலகம், கே.வி.குப்பம் சிவக்குமார், தமிழக அமைச்சர் வீரமணியின் அரசியல் உதவியாளர் சிவக்குமார் வீட்டில் ரெய்டு நடந்துக்கொண்டுள்ளது. இதில் அமைச்சர் வீரமணியின் வீடு, இடையாம்பட்டியில் உள்ள கட்சி அலுவலகம், அவரது திருமண மண்டபம், திருப்பத்தூரில் உள்ள ஹோட்டல் போன்றவற்றில் பிப்ரவரி 21ந்தேதி காலை 10 மணி முதல் சென்னை, வேலூரில் இருந்து வந்துள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்த சோதனை பற்றி தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட அதிமுகவினர் மட்டுமல்லாமல் அதிமுக தலைமையையும் அதிரவைத்துள்ளது. மத்திய அரசை ஆளும் பாஜகவோடு அதிமுக கூட்டணி சேர்ந்து 3 நாட்களே ஆன நிலையில் அதிமுகவை சேர்ந்த தமிழக அமைச்சரின் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்துவது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.


இதுப்பற்றி அமைச்சர் வீரமணி, முதல்வர், துணை முதல்வரிடமே பொங்கியுள்ளார். எதற்காக அவுங்க உங்களை குறிவச்சிருக்காங்கன்னு தெரியல என பதில் கூறியுள்ளனர். இதனால் அமைச்சரும் அதிருப்தியில் உள்ளார் எனக்கூறப்படுகிறது.


இந்த ரெய்டு பாஜக – அதிமுக கூட்டணியை பாதிக்குமா?, வீரமணி அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்பது இன்னும் தெரியாததால் அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு - ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Former Minister K.C. Case against Veeramani' - Governor's refusal to approve

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கும், அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

கைது செய்யப்பட்ட அதிமுக மா.செ... தொண்டர்கள் சாலை மறியல்!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

admk person Arrested ... Volunteers block the road!

 

வேலூர் டு காட்பாடி இடையே காட்பாடி ரயில்வே நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது.  இந்த பாதை ஆந்திரா மாநிலத்திற்குச் செல்லும் முக்கிய பாதையாகும். தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து திருப்பதி செல்லும் பாதையும் இதுதான்.

 

50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ரயில்வே மேம்பாலம் தற்பொழுது பழுதடைந்து உள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே காட்பாடி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது. இருந்தும் அந்தப் பாதை மிக மோசமான நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மேம்பாலத்தைச் சீர்படுத்த வேண்டும் என அந்த கோரிக்கையை அடுத்து வேலூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே நிர்வாகம் இணைந்து அந்த மேம்பாலத்தைச் சீர் செய்திடும் பணியில் ஈடுபட்டது.

 

இதற்காக கடந்த 10 தினங்களுக்கு மேலாக அந்த ரயில்வே மேம்பாலம்  செல்லும் வாகனங்கள் பாதை மாற்றி விடப்பட்டன.  தற்பொழுது அது ஓரளவு பணி முடிந்த நிலையில் ஜூன் 29 ஆம் தேதி மேம்பாலத்தின் தாங்கும் திறனை சோதனை செய்தனர். அதில் திருப்தி ஏற்பட்டதும் முதல் கட்டமாக ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தை அனுமதிக்கலாம் எனத் திட்டமிட்டனர். இதை வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் அறிக்கையாக வெளியிட்டார்.

 

இந்நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி காலை 10 மணி அளவில் அதிமுக வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் அப்பு, தன் கட்சியினருடன் சென்று அந்த மேம்பாலத்தில் ரிப்பன் கட்டி திறப்பு விழா செய்தார். அதோடு காட்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான துரைமுருகனையும் விமர்சனம் செய்தார். மேம்பாலம் செப்பனிடும் பணியை  வேகமாக செய்யவில்லை எனக் குற்றம் சாட்டி பேசினார்.

 

இது ஆளுங்கட்சியான திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்தது. இதுதொடர்பாக இன்று மாலை காட்பாடி வருவாய்த்துறை சார்பில், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  அந்த புகாரின் அடிப்படையில் மாநகரச் செயலாளர் அப்புவை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்படி அழைத்து வரும் போது தன் காவல் நிலையத்திற்கு வரமாட்டேன் என அப்பு தகராறு செய்துள்ளார். அதனை கண்டு கொள்ளாமல் காவல்துறை அவரை காவல் நிலையம் அழைத்து வந்தது. இந்த தகவல் தெரிந்து அதிமுகவினர் வேலூர் டூ காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியை பெரும் பரபரப்பில் உள்ளது.