Skip to main content

இலவசம் என்ற ஏமாற்று ஏன்? - சீமான் கேள்வி

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

 Why cheat that it's free! - Seaman Question


திராவிட மாடல் ஆட்சியில் அபார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று தமிழக முதல்வர் கூறிவரும் நிலையில் மோசமான நிதிநிலையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதலமைச்சர். அப்படியென்றால், கலால் வரி, சொத்துவரி என்று பலமடங்கு வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்தி, அதன் மூலம் அரசின் வருமானம் பெருகிவிட்டது என்று நிதியமைச்சர் கூறுவது பொய்யா? அல்லது இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியில் அபார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது பொய்யா?

 

பல மடங்கு வரியை உயர்த்தியும், மதுவிற்பனையை இருமடங்கு அதிகரித்தும் நிதிநிலை சரியாகவில்லை என்றால், அத்தனை மோசமான நிதிநிலையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப்பணம்தானே? அவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்துவிட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும்?'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்