வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார்கள், கோரிக்கைள் இருந்தால் அனுப்பலாம் என தனது தொகுதி மக்களுக்கு அந்த எண்ணை சமூக வளைத்தளங்கள் மூலமாக தெரியப்படுத்தியிருந்தார். அதனை தொடர்ந்து வேலூர் மாநகராட்சிகு உட்பட்ட சார்ப்பனாமேடு பகுதியில் குடிநீர் பைப்லைன் உடைந்து வீணாகிறது என்று வாட்ஸ் ஆப் மூலம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதனை பார்த்தவர் ஜனவரி 29ந் தேதி மாலை கட்சிக்காரர்களுடன் சம்மந்தப்பட்ட இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் நேரில் சென்று நேரில் பார்வையிட்டார். அதோடு, அங்குள்ள நீர்தேக்க தொட்டி பார்வையிட்டார், அந்த இடம் புள், செடிகள் முளைத்து காடு போல் இருந்தது. இதனால் மாநகராட்சி அதிகாரிகளை வரவைத்து அந்த இடங்களை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். நீர்தேக்க தொட்டி உள்ள இடத்தை தூய்மையாக வைத்திருக்க அறிவுருத்தினார்.
உடனடியாக அந்த பகுதிக்கு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வந்த மாநகராட்சி அதிகாரி கண்ணன், அந்த இடத்தை தூய்மை செய்ய வைத்தார். வாட்ஸ் அப் தகவலை கண்டு நேரில் வந்து எம்.பி பார்வையிட்டு அதிகாரிகளிடம் கூறியதும், அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் அப்பகுதி மக்கள் சந்தோஷமாகி சிலர் எம்.பி/ கதிர்ஆனந்த்தை தொடர்பு கொண்டு நன்றி கூறியுள்ளனர்.