
தமிழகத்தில் கல்வியை பற்றி சொல்வதற்கு இன்னொரு ஆளைக் கூட்டிக்கொண்டு வராதீர்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "மரணத்தை வைத்து அரசியல் செய்யும் நிலையில் திமுக உள்ளது. இந்தியாவிற்கே கேள்விக்கு நாங்கள் தான் முதல் என காமராஜ் சொன்னார். கல்வி வேண்டும் என்றால் தமிழ்நாட்டை வந்து பார்த்துக்கொள்ளுங்கள் நாங்கள் இந்தியாவிற்கு கல்வியைச் சொல்லித் தருகிறோம் என்றார். இன்று டெல்லியின் முதலமைச்சரை கொண்டு வந்து அவர்கள் மாதிரியைக் காப்பி அடிக்கிறார்கள். 70 ஆண்டுக்கால திமுகவின் வரலாற்றைப் பாருங்கள்.
எப்படிப்பட்ட கல்வியை வைத்திருந்தோம். எப்படிப்பட்ட பள்ளிகளை வைத்திருந்தோம்.தயவு செய்து தமிழ்நாட்டிற்கு கல்வியைப் பற்றிச் சொல்வதற்கு இன்னொரு ஆளைக் கூட்டிக்கொண்டு வராதீர்கள். கல்வியில் நாம் மிகவும் முன்னேறி இருக்கிறோம். டெல்லியின் கல்வி தற்போது சிறந்து விளங்குகிறது எனச் சொல்கிறார்கள். உண்மையில் நாம் வெட்கப்பட வேண்டும். நமது உடனடி தேவை பள்ளிக் கல்வித் துறையைச் சீர் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.