Published on 29/07/2018 | Edited on 29/07/2018

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியனுக்கு நேற்று அதிகாலை தீடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே தா.பா.வுக்கு டயாலிஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் தா.பா.வுக்கு சிகிச்சையளித்தனர். மதியத்திற்கு மேல் தா.பா. இயல்பான நிலைமைக்கு திரும்பினார். ஓரிரு நாட்களில் தா.பா வீடு திரும்புவார் என கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.