




Published on 24/12/2018 | Edited on 24/12/2018
மறைந்த முதல் அமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 31வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாக்கள் அஞ்சலி செலுத்தினனர்.
இதனையடுத்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழியை வாசிக்க மற்றவர்கள் ஏற்றனர். அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக மகத்தான வெற்றி பெற உழைப்போம். சுயநலக்கூட்டம் அரசியல் அரங்கில் மீண்டும் தலைதூக்க நினைப்பதை முறியடிப்போம். பெரியார் புரட்சி கருத்துகளை அண்ணா காட்டிய வழியில் மக்களின் ஆதரவோடு நிலைநாட்டுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.