
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 16வது போட்டி, உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இன்று (04.04.2025) நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பு 203 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டைகளை கைப்பறி அசத்தினார் கைப்பற்றினர். லக்னோ அணியில் அதிகபட்சமாக மிட்சல் மார்ஸ் 31 பந்துகளில் 60 ரன்களையும், எய்டன் மார்க்ராம் 38 பந்துகளில் 53 ரன்களையும், ஆயுஸ் பட்டோனி 19 பந்துகளில் 30 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் மும்பை அணி வெற்றி பெற 204 ரன்களை இலக்காக லக்னோ அணி நிர்ணயித்தது.
இதன் மூலம் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடின இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. இதனையடுத்து மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். நாமன் தீர் 24 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். மேலும் ஹர்திக் பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 28 ரன்களையும் குவித்தார். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
அதே சமயம் கடந்த 17 வருட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா படைத்தது குறிப்பிடத்தக்கது.