சென்னை அசோக் நகரில் உள்ள நடசேன் தெருவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் இன்று திறந்து வைத்தார். இதில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஆகியோர் கலந்து கொண்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் வெற்றிவேல் மற்றும் தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
திறப்பு விழாவில் பேசிய டிடிவி தினகரன், திமுகவை எதிர்த்து அதிமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். வரும் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ராயப்பேட்டையில் உள்ள கழக அலுவலகத்தை கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டார்.
படங்கள்: ஸ்டாலின்