குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை வண்ணாரப்பேட்டையில் வியாழக்கிழமை 7 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுதைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துக்கொண்டு பேசினார்.
அதில் இச்சட்டத்திற்கு எதிராக நாங்கள் பிரகடனம் செய்யமாட்டோம் என்று கேரளா அரசு, பாண்டிச்சேரி அரசு முதல்வர்கள் சொன்னதை போன்று தமிழக முதல்வரும் நேரில் வந்து சொல்லும் வரை நாங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள மாட்டோம் என்று, போராடிக்கொண்டு இருக்கிற உங்களை வரவேற்கிறேன். ஆளும் அதிமுக தற்போதுதாவது புரிந்துக்கொள்ள வேண்டும். இனியும் பிஜேபி உடனான கூட்டணியை முடித்துகொள்ளவில்லை என்றால் மக்கள் நம்மை விரட்டி அடிப்பார்கள். இதை அதிமுக கேட்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சியம் இவை நடந்து விடும் என்கிற உணர்வார்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.
இது தொடர்பாக முதல்வர் அவர்கள் சட்டசபையில் சவால் விடுத்து இருக்கிறார். அது எதிர்கட்சி தலைவருக்கு விடுத்த சவாலாக நான் கருதவில்லை, ஒட்டுமொத்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுகிறவர்களுக்கு விடுத்த சவாலாக நான் பார்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றமே தடைவிதித்த போதும் மெரினா போராட்டம் செய்த போராட்டம்தான் மத்திய அரசும் மாநில அரசும் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. அது தான் போராட்டத்தின் வெற்றி. ஆகையால் ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடுவோம் என்றார்.