Skip to main content

விஜயகாந்த் மகனுக்கு தேமுதிகவில் புதிய பதவி?

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் கொடுக்கப்பட்டன. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. மேலும் தேமுதிக மாநில கட்சி அந்தஸ்த்தையும் இழந்தது. அதோடு தேமுதிக 2 சதவிகித வாக்குகளை மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் பெற்றது. இதனால் தனது வாக்கு வங்கியை பெருமளவு இழந்தது. இதற்கு காரணம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பு போல் கட்சி பணியில் இல்லாததும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதே போல் பிரேமலதா கட்சி நடத்தும் முறை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது என்கின்றனர். 
 

dmdk



இந்த நிலையில் தேமுதிக கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இவரது பிரச்சாரம் அதிமுக தரப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதனால் வேலூர் தேர்தலில் விஜய பிரபாகரனை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த அதிமுக தரப்பு விரும்பவில்லை என்று கூறப்பட்டது. மேலும் தேமுதிக கட்சி தேர்தலுக்கு பின்பு மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் வரும் செப்டம்பர் 15ம் தேதி, விஜயகாந்தின் பிறந்தநாளின் போது, தேமுதிகவில் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க விஐயகாந்த் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பாக விரைவில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து அந்த விழாவில் தனது மகனுக்கு இளைஞரணியில் பதவி கொடுக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்