Skip to main content

தி.மு.க.வை உன்னிப்பாக கவனிக்கும் உளவுத்துறை! கலக்கத்தில் பாஜக!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக  பிரித்தது. இதற்கான மசோதாவை இந்த மாத துவக்கத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது. அத்துடன் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 

dmk



ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். இதில், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். திமுக அறிவித்த இந்த போராட்டத்திற்கு பாகிஸ்தானில் உள்ள சில ஊடகங்கள், இந்தியாவில் 2019 ம் ஆண்டு தேர்தலில் 3வது பெரிய கட்சியாக வெற்றி பெற்ற திமுக, மோடி அரசின் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டன. 


இதனால் இங்கு இருக்கும் பாஜக கட்சியினர் திமுக பாகிஸ்தானிற்கு ஆதரவாக உள்ளது போன்ற நிலையை உருவாக்க முயற்சித்தனர். மேலும் இந்த போராட்டத்தால் திமுக சிறுபான்மையாயின மக்களின் கட்சி என்று மீண்டும் நிலைநிறுத்தியது. திமுக நடத்திய இந்த போராட்டத்தால் மோடி, அமித்ஷா மற்றும் பாஜகவினர் திமுகவின் அடுத்த நிலைப்பாடு என்ன என்று உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் எதிர்பாராத விதமாக திமுக நடத்திய போராட்டம் குறித்து பாக்கிஸ்தானில் வெளியிடப்பட்ட செய்தியால் திமுகவை வேறு தலைவர்கள் ஏதும் தொடர்பு கொண்டு போராட்டம் நடத்த  ஏதும் முயற்சி செய்கிறார்களா என்று உளவுத்துறை அமைப்பை கவனிக்க சொன்னதாக சொல்லப்படுகிறது. இதனால் பாஜகவினர் திமுக நகர்வை உன்னிப்பாக கவனித்து வருவதாக சொல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்