Skip to main content

செந்தில்பாலாஜி தனது பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு... சீமான் பேச்சு

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்தார்.

 

seeman speech



 

அப்போது அவர், சீமான் தோற்போம் என்று தெரிந்தும் ஏன் போட்டியிடுகிறீர்கள்? என்று என்னை கேட்கிறார்கள். நீங்கள் சாவோம் என்று தெரிந்தும் ஏன் சாப்பிடுகிறீர்கள். பதில் இருக்கா? நீங்க வாக்கு செல்லுத்துங்கள். செலுத்தாமல் இருங்கள். எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. நாங்கள் ஓட்டுக்காக கத்திக்கொண்டிருக்கவில்லை. இந்த நாட்டுக்காக கத்திக்கொண்டிருக்கிறோம். 
 

திமுகவை வீழ்த்திவிடுவீர்களா? அதிமுகவை வீழ்த்திவிடுவீர்களா? என்று கேட்கிறார்கள். நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது. நீங்கள் ஓட்டுக்கு காசு கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்யுங்கள். செய்ய மாட்டார்கள். இவர்களை ஒழிக்காமல் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். 


 

திமுக, அதிமுக வெவ்வேறு கட்சி இல்லை. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வெவ்வேறு கட்சிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் இருவரும் ஒன்றுதான். அமமுகவில் இருந்து மொத்தம் மொத்தமாக திமுகவில் இணைகிறார்கள். செந்தில் பாலாஜி தனது பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு கலைஞரை திட்டிக்கொண்டிருந்ததைப்போல, இப்போது ஸ்டாலின் படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை திட்டிக்கொண்டிருப்பது என்ன கொள்கை. அப்போது இரண்டும் ஒரே கட்சிதான். நாங்கள் தேர்தலில் கூட்டணி வைத்து நிற்கிறோமா? ஏன்? மக்களை நம்புகிறோம். ஆனால் அவர்கள் வைக்கிறார்கள். ஏன்?. அவர்கள் மக்களை நம்பவில்லை. நாங்கள் மக்களை நம்புகிறோம். தனித்து நிற்கிறோம். இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்