வேலூர் பாராமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வீடு, கல்லூரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை கடந்த ஏப்ரல் 1ந்தேதி சோதனை நடத்தியது. இதில் கதிர்ஆனந்தின் ஆதரவாளர் வீட்டில் இருந்து 11.4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் வாக்குசாவடி வாரியாக பெயர் எழுதி பணம் கவரில் போட்டு வைக்கப்பட்டுயிருந்தது.
இதுபற்றிய அறிக்கையை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்துள்ளது வருமானவரித்துறை. அந்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் வேலூர் நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் கதிரவன் என்கிற சுயேட்சை வேட்பாளர், கதிர்ஆனந்த் வீடு மற்றும் அவரது ஆதரவாளர் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதை செய்தித்தாள் வழியாக கண்டோம். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அதனால் இந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். என்னைப்போன்ற சாதாரண அடிதட்டு மக்களின் பிரதிநிதியாக பணியாற்ற தேர்தலில் போட்டியிடும் என்னைப் போன்றவர்களுக்காக தேர்தலை நிறுத்தாமல் அவரை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
ஒரு தொகுதியில் பணம் கைப்பற்றப்பட்டால், அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்தியே தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அரவக்குறிச்சியிலும், ஆர்.கே.நகர் தொகுதியில் அப்படித்தான் செய்தது. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை. வேலூரில் மட்டும் தகுதி நீக்கம் செய், தேர்தலை நிறுத்தாதே என்பதற்கு பின்னணயில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் உள்ளார். இதுவரை 30 கோடி ரூபாய்க்கு செலவு செய்துள்ள அவர், தேர்தலை நிறுத்தினால் சரியாக வராது என்பதாலே தேர்தலை நிறுத்தகூடாது என்பதற்காக, எதிர் போட்டியாளரான கதிர்ஆனந்த்தை தகுதிநீக்கம் செய், தேர்தலை நிறுத்தாதே என ஒரு மனுவை சுயேட்சையை வைத்து தரவைத்துள்ளார் என்கிறார்கள் திமுக தரப்பில்.
அடுத்து என்ன நடக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் தொகுதி.