#GeorgeFloyd- ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைசெய்யப்படும் காட்டுமிராண்டித்தனம்.I can't breath- "என்னால்மூச்சுவிட முடியல" என்றுகடைசியாய் கதறியிருக்கிறார் அவர். வெள்ளை காவல்அதிகாரிகள் ஈவிரக்கமின்றி முழங்கால்களால் அழுத்திக் குரூரமாய்க்கொன்றுள்ளனர். #BlackLivesMatters #ICantBreath_floyd pic.twitter.com/H97iiKKIva
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 30, 2020
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில், போலீஸ்காரர் ஒருவரால் குரல்வளை நசுக்கப்பட்டு, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கதறி அழுத படியே உயிரைவிட்ட கறுப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மின்னியாபோலிஸ் நகரில் நடந்த இந்தச் சம்பவத்தால் போராட்டங்கள் அதிகளவில் நடந்துவருகின்றன. இந்தச் சம்பவத்தால் கறுப்பின மக்களின் கோபம் வன்முறையாகப் பல இடங்களில் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்கா வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் ஜார்ஜ்ஃப்ளாய்ட் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கறுப்பர் என்பதால். அவரது கழுத்தைக் காவல்துறையினர் முழங்கால்களால் அழுத்தியே கொன்றனர். இது இனவெறிப் படுகொலையென மக்கள் கொதிக்கின்றனர். கரோனா துயரத்திலும் இனவெறிக் கொடூரம். இந்த சாதி, மத, இனவெறி எப்போது மாயும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்படுவது காட்டுமிராண்டித்தனம். I can't breath- "என்னால் மூச்சுவிட முடியல" என்று கடைசியாய் கதறியிருக்கிறார் அவர். வெள்ளை காவல் அதிகாரிகள் ஈவிரக்கமின்றி முழங்கால்களால் அழுத்திக் குரூரமாய்க் கொன்றுள்ளனர் என்றும் பதிவிட்டுள்ளார்.